Showing posts with label Competition. Show all posts
Showing posts with label Competition. Show all posts

14 November 2009

திருடன்

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி]

தங்களது பரம்பரை தொழிலை எவ்வளவு தான் விடனும்னு நினைத்தாலும் அவர்களால் விட முடியவில்லை..
தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் அதனை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார்கள்..

சுப்பன்


எவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் உள் புகுந்து தனக்கு தேவையானவற்றை திருடிக் கொள்வான். அவனது திறமையைக் கண்டு அவனது நண்பர்கள் கூட்டம் அவனை தங்களது குழு தலைவராக நியமித்திருந்தார்கள். எவ்வளது கடினமான பாதுகாப்புகள் இருந்தாலும் அனைத்தையும் கண் கழுவி விட்டு தனது கைவரிசையை காட்டிவிடுவான். குப்பனை தவிர‌ வேறு யாரையும் நம்பாதவன்.



குப்பன்


சுப்பனின் அப்பாவின் உயிரை காப்பாற்ற லோரியில் தனது உயிரைவிட்டவரின் மகன். அதனால் குப்பனிடம் தனி அன்பு மிக்கவன் சுப்பன். சுப்பன் அள‌விற்கு ஒரு துளிக் கூட இவனிடம் தைரியமில்லை. சுப்பனிடம் உதவி வேண்டும் என்றால் அனைவரும் குப்பனை தான் நாடுவார்கள். குப்பனின் அப்பாவின் உயிர் தியாகத்தால் இன்று வரை சுப்பன் இவனை விட்டு பிரிந்த்து இல்லை.

வெகு நாட்களாக அந்த பச்சை கலர் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை திருட வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டிருந்தான் சுப்பன். ஆனால் அந்த வீட்டின் தனிமையில் இருக்கும் கிழவர் இதனை அறிந்துக் கொண்டு அவர்களை வீட்டின் அருகில் நெருங்க முடியாமல் இரண்டு நாய்களை வளர்த்துக் கொண்டிருந்தார்.



இரண்டு நாட்களாக அந்த வீட்டில் ஒரு நாய் மட்டுமே காவலுக்கு இருக்கிறது. சுப்பன் தனது நண்பர்களிடம் விசாரித்ததில் அந்த நாய்க்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தெரிய வந்தது.கிழவரும் அங்கும் மிங்கும் அலைந்துக் கொண்டிப்பதை நோட்டமிட்டான் சுப்பன். இது தான் சுப்பனுக்கு சரியான தருணம். இதை விட்டால் அந்த வீட்டில் திருடுவது மிகவும் கடினம் என உணர்ந்தான்.



குப்பனை துணைக்கு அழைத்தான். அவனிடம் தனது திட்டங்களை கூறினான். குப்பனோ.. அந்த நாயிடம் நெருங்கவே பயந்தான்.


"டேய் குப்பா , உன்னால முடியலன என் வேலையை நீ செய் சரியா?" எரிச்சலுடன் கூறினான்.



"இல்லைடா.. அதுல நான் மாட்டிகிட்டா என் உயிரு போயிடும்.. நானே அந்த நாயை திசை திருப்பிரேன்" பயத்துடன் உதறினான் குப்பன்.

சுப்பன் நினைத்தது போல மாலை ஒன்றுக்கு அந்த கிழவன் வீட்டை விட்டு கிளம்பினான்..இன்னும் முப்பது நிமிடம் தான் இருக்கிறது அவர்களின் திட்டத்தை நிறைவேற்ற.



குப்பன் நேராக அந்த வீட்டின் கேட்டின் மேல் ஏறி, அந்த நாயைப்பார்த்து கேலி செய்துக் கொண்டிருந்தான். அந்த நாயோ அவனை பிய்த்து எறியாத குறைதான்.. அந்த நாயின் முழு கவனமும் குப்பன் மேலிருக்க.சுப்பன் நைசாக வீட்டின் ஜன்னலின் வழியாக உள் சென்று , இவ்வளவு நாளும் அவர்கள் கங்கனம் கட்டி கொண்டிருந்த அந்த சிறிய சுருக்குபையை தனது வாயால் கவ்விக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றான்.



தாங்கள் இருக்கும் புதருக்குள் குளிர் காலங்களில் போர்த்திக் கொள்ள அந்த சுருக்குப் பையை இவ்வளவு காலமாக குறிவைத்திருந்தான் சுப்பன் எனும் மைனா.. :)

11 December 2007

பூ பூக்கும் ஓசை...


பூ பூக்கும் ஓசை...


பூக்களை புகைப்படத்துள் யார் அழகாக அடைக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்னு சொல்லிட்டாங்க..சரி போட்டினு வந்துட்டா சும்ம இருக்க முடியுமா?நம்ம கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே..எனக்கு புகைப்பட எடுக்கிற வித்தையெல்லாம் தெரியாதுங்க...ஆனால் அழகாக எடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிப்பேன்..

ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நினைத்துண்டு.. அது எப்ப‌டி பிற‌ர் எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் அம்ச‌மாக‌ இருக்கிறதுனு..பள்ளியில் படிக்கும் பொழுது எனது அக்கா பங்கேற்றுக்கு கொண்ட ஆடை அலங்கார நிகழ்ச்சியில் நான் எடுத்த படத்தைப் பார்த்து இன்றும் எனக்கு திட்டுகள் விழும்...இப்பொழுது இருக்கும் கேமீராவை நான் வாங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அதனை இப்பொழுது பயன் படுத்திய அளவிற்கு நான் நோண்டியது கிடையாது..

முதல் முயற்சி.. போலி பூக்கள்...
பரவால்லையே அதுவும் அழகுதான்...





அதுவும் பூக்களை படம் எடுக்க வேண்டும் என காலையில் வேலைக்குச் சொல்லும் முன் எடுத்த படங்கள்..
















இவைகளில் என்னை கவர்ந்தது , அந்த ஊதா வர்ணத்தில் உள்ள பூக்களே.. அவற்றில் மேல் உள்ள அந்த மழைத்துளிகள் அந்த பூக்களுக்கு மேலும் மெருக்கோட்டுகின்றது.. அதே வேளையில் அந்த பூக்களில் உள்ள ஒரு வாடிய பூ அந்த படத்தில் உள்ள அழகை கெடுப்பதை போல ஒரு உணர்வு.. அதற்காக அதை பிகாசா மூலம் வெட்டி எடுத்தேன்..







ஆனால் அதன் பிறகு அந்த பூக்களின் படத்திற்கு அவ்வளவான அழகு இருப்பது போல எனக்கு தெரியவில்லை.. ஏன் வாடியதானல் அதை ஒதுக்க வேண்டுமா என்ன? அதுவும் ஒரு பூதானே என அப்படியே விட்டுவிட்டேன்...






எல்லாம் இருட்டில் எடுத்த‌து போல‌ இருக்கிற‌தே என‌ காலையில் ஒரு 11 ம‌ணிக்கு வீட்டில் தொங்கிக் கொண்டிந்த‌ சில‌ பூக்க‌ளை எடுத்தேன்..










அப்பொழுதும் அதே ஊதா வ‌ர்ண‌ பூதான் என‌க்கு பிடித்திருந்த‌து.. ஊதா ஊதா ஊதாப்பூ... அதுதான் என‌க்கு இப்பொ பிடிச்ச‌ பூ..
ஆகாய‌த்தைப் பார்த்து எடுத்த‌தால் அந்த‌ பூக்க‌ளின் ப‌ட‌ம் இன்னும் ந‌ன்றாக‌ வ‌ந்திருப்ப‌தாக் என‌து யூக‌ம்..



ஆக‌வே நான் போட்டிக்கு தேர்ந்தெடுத்த‌ ப‌ட‌ம் கீழே உள்ள‌து தானுங்க‌..நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌னு சொன்ன‌ என்னோட‌ திற‌மையை இன்னும் வ‌ள‌ர்த்துப்பேனுங்க‌..