பூ பூக்கும் ஓசை...
பூ பூக்கும் ஓசை...
பூக்களை புகைப்படத்துள் யார் அழகாக அடைக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்னு சொல்லிட்டாங்க..சரி போட்டினு வந்துட்டா சும்ம இருக்க முடியுமா?நம்ம கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே..எனக்கு புகைப்பட எடுக்கிற வித்தையெல்லாம் தெரியாதுங்க...ஆனால் அழகாக எடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிப்பேன்..
பல சமயங்களில் நினைத்துண்டு.. அது எப்படி பிறர் எடுக்கும் படங்கள் அம்சமாக இருக்கிறதுனு..பள்ளியில் படிக்கும் பொழுது எனது அக்கா பங்கேற்றுக்கு கொண்ட ஆடை அலங்கார நிகழ்ச்சியில் நான் எடுத்த படத்தைப் பார்த்து இன்றும் எனக்கு திட்டுகள் விழும்...இப்பொழுது இருக்கும் கேமீராவை நான் வாங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அதனை இப்பொழுது பயன் படுத்திய அளவிற்கு நான் நோண்டியது கிடையாது..
முதல் முயற்சி.. போலி பூக்கள்...
பரவால்லையே அதுவும் அழகுதான்...
அதுவும் பூக்களை படம் எடுக்க வேண்டும் என காலையில் வேலைக்குச் சொல்லும் முன் எடுத்த படங்கள்..
இவைகளில் என்னை கவர்ந்தது , அந்த ஊதா வர்ணத்தில் உள்ள பூக்களே.. அவற்றில் மேல் உள்ள அந்த மழைத்துளிகள் அந்த பூக்களுக்கு மேலும் மெருக்கோட்டுகின்றது.. அதே வேளையில் அந்த பூக்களில் உள்ள ஒரு வாடிய பூ அந்த படத்தில் உள்ள அழகை கெடுப்பதை போல ஒரு உணர்வு.. அதற்காக அதை பிகாசா மூலம் வெட்டி எடுத்தேன்..
ஆனால் அதன் பிறகு அந்த பூக்களின் படத்திற்கு அவ்வளவான அழகு இருப்பது போல எனக்கு தெரியவில்லை.. ஏன் வாடியதானல் அதை ஒதுக்க வேண்டுமா என்ன? அதுவும் ஒரு பூதானே என அப்படியே விட்டுவிட்டேன்...
எல்லாம் இருட்டில் எடுத்தது போல இருக்கிறதே என காலையில் ஒரு 11 மணிக்கு வீட்டில் தொங்கிக் கொண்டிந்த சில பூக்களை எடுத்தேன்..
அப்பொழுதும் அதே ஊதா வர்ண பூதான் எனக்கு பிடித்திருந்தது.. ஊதா ஊதா ஊதாப்பூ... அதுதான் எனக்கு இப்பொ பிடிச்ச பூ..
ஆகாயத்தைப் பார்த்து எடுத்ததால் அந்த பூக்களின் படம் இன்னும் நன்றாக வந்திருப்பதாக் எனது யூகம்..
ஆகவே நான் போட்டிக்கு தேர்ந்தெடுத்த படம் கீழே உள்ளது தானுங்க..நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொன்ன என்னோட திறமையை இன்னும் வளர்த்துப்பேனுங்க..
3 comments:
Good :)
பனித்துளியும் வானத்தை நோக்கும் பூக்களும் அழகான தேர்வு.வாழ்த்துக்கள்.
கடைசி இரண்டு படங்கள் அருமை! வாழ்த்துக்கள்!
Post a Comment