26 November 2006

எதிர்காலம்

சேவக் கோழியின் சத்தம் கேட்டு படுக்கையை விட்டு எழுந்தான் சரண். எப்பொழுதும் அவன் எழும் நேரம் என்று அவன் அறிந்திருந்தான். நேரம் பார்க்க கூட அவன் வீட்டில் கடிகாரம் இல்லையே.
வறுமை எனும் வார்த்தையை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு சொந்தம் இல்லை. வேலை செய்யும் அளவிற்கு வயது ஆகிவிடவில்லை அவனுக்கு, இடைநிலை பள்ளியில் பயிலும் வயதுதான் .
என்ன செய்வது? வீட்டின் சூழ்நிலை அப்படி. பொறுப்பற்ற அப்பா, எந்த நேரமும் சாராய வாடையுடனும் அதற்கேத்தாற்போல கையில் ஒரு பாட்டில் உடனும், தனக்கே உறிதான தள்ளாட்டத்துடன் இருப்பார்.
அம்மா எவ்வளவு தான் போராடுவார்கள்? நாட்கள் ஆக ஆக அவரால் போராட இயலாத நிலை. அம்மாவால் சமளிக்க முடியவில்லை. பாதி வயிறு கஞ்சி குடித்து நாட்களை தள்ளிக் கொண்டிருந்தவர்கள் நாட்கள் ஆக ஆக கால் வயிறாக மாறியது. பசி என்று தம்பி தங்கைகள் அம்மாவிடம் கதறும் பொழுது, அவனது படிப்பு, அவனுக்கு பெரியதாக படவில்லை.
தனது எதிர்காலத்தை பணயம் வைத்தான். நால்வரும் பசியால் வாடுவதை விட, இவனது கல்வியை பாதியில் விட்டுவது மேல் என்று எண்ணினான். இதனால் வீட்டில் உள்ளவர்களின் வயிறாவது நிரம்பும் என்று முடிவுக்கு வந்தான்.
அவன் என்ன செய்வான்? குடும்ப சூழ்நிலை அப்படி. தன் தம்பி தங்கைகளின் எதிர்காலங்கள் ஒளிமையமாக இருக்க தனது கல்வியை இருட்டு அறையில் பூட்டினான்.
"சீக்கிரம் வா சரண்,மேஸ்திரி இன்னைக்கு நிறைய மரம் வெட்டனும்னு சொன்னார்", அம்மாவின் குரல் தன்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
தனது காலை கடன்களை முடித்துவிட்டு ரப்பர் தோட்டத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன......
-- அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....

No comments: