26 November 2006

மதுவினால் ஏற்படும் விளைவுகள்
நாங்கள் எங்களது வாகனத்தை அந்த அங்காடி முன் நிறுத்தினோம். அப்பொழுது ஒரு முதியவர் தள்ளாடிக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். வாகனததை செலுத்தி வந்த அக்காவோ, எனது தாயாரிடம் கண்டிப்பாக சொல்லி விட்டார். " அம்மா அவர் என்னிடம் பணம் கேட்டால் கண்டிப்பாக நான் தர மாட்டேன் ".. என்ன, வியப்பாக இருக்கிறதா?
ஆனால் இதுதான் உண்மை. இந்த ஊரில் பல இடங்களில் இது நடக்கிறது.
ஆம், இந்த சம்பவம் ஒன்றும் புதியதல்ல எங்களுக்கு. இந்த நகரத்தில் இது ஒரு சாதரண சம்பவம். வாகனததை நிறுத்தும் பொழுது இம்மாதிரியான ஆட்கள் வந்து காசு கேட்பது வழக்கம் தான். இதில் எனக்கும் எனது அக்காவிற்கும் சிறு துளி கூட விருப்பம் இல்லை.
அதுவும் மது அருந்துபவர்களை கண்டாலே வெறுக்கும் எங்களுக்கு, ஒருவர் குடிப்பதற்க்கு பணம் கொடுப்பது, அவரை மது அருந்துவதற்கு தூண்டி விடுவதற்கு சமம் என எண்ணுவோம்.
பசி என வந்தால் பரவாயில்லை. இப்படி மதுவுக்காக வந்து காசு கேட்டால் அது அநியாயம் அல்லவா? சில நேரங்களில் இவர்களை மேல் அதிகாரியிடம் காட்டிக் கொடுக்கலாம் என எண்ணினால், இப்படி செய்பவர்கள் தொண்ணுறு சதவிகிதம் நமது இனத்தவர்கள் எனும் உண்மையை நினைக்கும் பொழுது, அமைதியாகிவிடுகிறோம்
இம்மாதிரி மதுவுக்காக பணம் கேட்பவர்கள் பலர் முதியவர்களே. இவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா என வினவினால், சிலருக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை பராமரிப்பதில்லை. இன்னும் சிலரோ, பிள்ளைகள் மது அருந்துவதற்காக பணம் கொடுக்காதலால் வீட்டை விட்டு வந்து இப்படி பணத்தை சேர்க்கிறார்கள், அவர்களின் நலத்தை அழிக்க.
மது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை சீரழிக்கின்றது என்பதற்க்கு இது ஒரு மிகச்சிறந்த சிறு உதாரணம். மஞ்சூர் அண்ணாவிற்கு நன்றி. என் எழுத்துபிழைகளை அவர்தான் சரி செய்தார்.
-- அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....

No comments: