12 November 2006

என் பார்வையில்....*

காலையில் இருந்தே என்னால் ந‌ன்றாகவே தூங்க முடிய‌வில்லை. முத‌லில் அம்மாவும் அப்பாவும் வெளியே சென்றார்கள், பிறகு பெரிய‌ அக்காளும் சின்ன அக்காளும் சென்றார்கள். அவர்கள் நால்வரும் திரும்பும் பொழுது கையில் இரண்டு பெரிய டின்களும் சில தூரிகைகளையும் வாங்கி வந்தார்கள்.

பிறகு இரண்டு அக்காமார்களும் வீட்டை சுத்தம் செய்தார்கள். என்னால் ஒரு நிமிடம் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. என் தூங்குமிடத்தில் உற்கார்ந்து இருக்க முடியவில்லை. என் சின்ன அக்காள் எதையோ சுத்தம் செய்வதாய் வீட்டை இரண்டாக்கி கொண்டிருந்தாள். என் பெரிய அக்காள் அம்மாவுடன் அடுப்பறையில் எதையோ தீய வைத்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் நறுமணமாக இருக்கும் சமயல் இன்று வேறு மணம் வரும் பொழுதே எண்ணினேன், இது அக்காளின் வேலையாக இருக்கும் என்று...

நல்ல வேளை அம்மா எனக்கு எப்பொழுதும் தனியாக சமைத்துவிடுவார். எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டில் இருக்கும் மற்றவரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. சரி அனைவரும் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார்களே என்று நாமும் உதவி செய்ய‌லாம் என்று சென்றால் உடனே அம்மா நீ இங்கு வர வேண்டாம் உன்
இட‌த்தில் பேசாமல் உட்கார் என்று சொல்லிவிடுவார். நானும் அம்மாவின் சொல்லை த‌ட்டாமல் உட்கார்ந்துவிடுவேன்.

அவ‌ர்கள் வாங்கி வ‌ந்த சாய‌த்தை சுவ‌ரில் பூசும் பொழுது அதன் நாற்றாம் தாங்க முடிய‌வில்லை. எப்ப‌டிதான் அம்மாவும் அப்பாவும் இந்த நாற்ற‌த்தை ச‌மாளிக்கிறார்களோ தெரிய‌வில்லை. எனக்கு நுக‌ர்வும் ச‌க்தி ச‌ற்று அதிகம் என்று அவ‌ர்க‌ளுக்கு தெரிந்தும் என்னை இப்படி இக்க‌ட்டான சூழ்நிலையில் வைத்துவிட்டார்கள், இத‌னாலயே இர‌ண்டு நாட்கள் என்னால் ச‌ரிவர‌ உணவை உட்கொள்ள முடிய‌வில்லை. மிகுந்த சோர்வடைந்தேன்.

இதை காணுற்ற‌ அம்மா மிக‌வும் வேதனை அடைந்தார். அம்மா அக்காள்களை
என‌க்கு சோறு ஊட்டி விடச் சொன்னார். அம்மாவின் ஆத‌ங்கம் என‌க்கு புரிந்தாலும் ஒரு ப‌ருக்கை சாதம் கூட‌ என் தொண்டையில் இற‌ங்க ம‌றுத்தது.
பிறகு பெரிய‌ அக்காள் என‌க்கு ஒரு த‌ம்ளர் பால் க‌ல‌க்கி கொடுத்தார். அதை குடித்த பிறகு தான் அம்மாவின் முக‌த்தில் ச‌ந்தோஷ‌த்தை பார்த்தேன்.
அடுத்த சில நாட்க‌ளில் வீட்டில் உள்ள‌ அனைவ‌ருக்கும் அம்மா புதிய‌ உடைகளை வாங்கிக் கொண்டு வ‌ந்தார் அம்மா. என‌க்கு ம‌ட்டும் ஒரு உடைகளை வாங்கித்தர வில்லை.ஏன் என்று அம்மாவிடம் வின‌விய பொழுது என‌க்கு த‌குந்த‌ உடைகள் அங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.!!!

நானும் அமைதியாக‌ எனது இருப்பிடம் சென்றேன்.
இரு வாரங்களாக தூங்க இயலாமல் இன்று தான் சற்று கண் அயர்ந்தேன்.. அதற்குள் பட்டாசு வெடி சத்தம். நான் அலறி அடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஓடினேன். அங்கு பார்த்தால் வீட்டில் உள்ள அனைவரும் அவர், அவர் கைப்பேசியை வைத்துக் கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருந்தனர்.. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒரு மூலையில் சுருண்டுக் கொண்டேன்.அதுதானே என் நிரந்தர இடம்!!
இந்த‌ தீபாவ‌ளி வ‌ந்தாலே இப்ப‌டி தான் நாங்க‌ள் எல்லாம் வீட்டிலும் ஏன் ரோட்டிலும் கூட இருக்க ‌ முடியாது....

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும் போதே எனக்கு ஜுரமும் கூடவே வந்துடுது...... ம்ம்ம். என்ன தான் பண்ணுவதோ தெரியலெ...
சரி நான் யார் தெரிகிறதா...

-- அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next...

3 comments:

Anonymous said...

veetin chella prani... நாய் :) vidai seriya?

Anonymous said...

Seri taan :-)

Anonymous said...

ha ha ha h
1. Naikku utti vitangala.......
2. Nai pesucha.........